[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

தந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்

4-year-old-boy-who-was-beaten-in-the-river-4-year-old-boy-who-was-beaten-in-the-river-cauvery

நாமக்கலில் தந்தையின் புகைப்பட மோகத்தால் 4 வயது சிறுவன் ஒருவன் காவிரி ஆற்றில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் நகராட்சி எல்.ஜி.பி நகரை சேர்ந்த பாபு -‌சோபா தம்பதியினரின் 4 வயது‌ மகன் தன்வந்த். நேற்று தன்வந்துக்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தந்தை பாபு மகனை காரில் அழைத்து கொண்டு மோகனூர் - வாங்கல் காவிரி ஆற்று பாலத்திற்கு தண்ணீரை காண வந்துள்ளார். அப்போது பாலத்தின் கிழக்கு புறம் உள்ள 24 வது தூண் மீது மகன் தன்வந்தை அமர வைத்து அவனை இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.

Read Also -> கயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்!

Read Also -> நம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..? இவர்கள் உண்மையான ஹீரோக்கள்..! 

அப்போது எதிர்பாராத விதமாக‌ தன்வந்த் நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்துள்ளான். காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும் நிலையில் சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயானுர் கதவனை பகுதியிலும் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாபுவை மோகனூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் இன்று ஆற்றில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close