[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புது அறிவிப்பால் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தற்கொலை..!

youth-suicide-in-vellore

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியும் வேலை கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(27). இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிறது. இவர் விலங்கியல் பாடத்தில் Msc,B.Ed முடித்துவிட்டு M.Phil படித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு  நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவு வெளியாகும் இடைபட்ட காலத்தில் படித்த படிப்புக்கு வேலைக்கிடைக்காத காரணத்தினால் தனியார் ஓட்டலில் பணிபுரிந்தும் வந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவு வெளியிடப்பட்ட போது ஜெயபிரகாஷ் அதிக மதிபென் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதனிடையே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்து அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். கடந்த 10-நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆசிரியர் நியமன தேர்வு எழுத வேண்டும் என புதிய அரசானை வெளியிடப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயபிரகாஷ் இனி வேலை கிடைக்காது என எண்ணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெயபிரகாஷ் தற்கொலை செய்வதற்க்கு முன்னதாக அவர் கைபட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அக்கடிதத்தில் “ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைக்கபோவதும் இல்லை. மன உளைச்சலுக்கு ஆளாகி நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்திற்கு காரணம் தமிழக அரசு அறிவித்த TET ஆசிரியர் நியமன தேர்வை எழுத வேண்டும் என்ற அறிவிப்பு தான். என் மரணத்திற்கு காரணம் தமிழக அரசு தான்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அக்கடிதத்தில் தன் பெற்றோர் தன்னை மன்னிக்க வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்த அவர் தன் பெற்றோருக்கு தானே அடுத்த ஜென்மத்தில் மகனாகவும். தனது மனைவிக்கு கணவனாகவும் இருக்க வேண்டும் என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

(தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல; மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060))

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close