[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

வெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் !

firefighters-save-dogs-near-namakkal

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் காவிரி வெள்ளத்தில் சிக்கிய நாய் ஒன்று 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ளது கொக்கராயன்பேட்டை. கொக்கராயன் பேட்டையில் இருந்து பட்லூர் செல்லும் வழியில் காவிரி வெள்ளத்தில் சிக்கி கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்புத் துறைக்கு இன்று தகவல் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அத்தி மரத் தோட்டம் என்ற பகுதிக்கு சென்று சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் வேலையில் மரங்களில் கயிறுகளை கட்டி நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

                   

இதனையடுத்து இரண்டு நாட்களாக பசியுடன் இருந்த அந்த நாய், காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர்களை கடிக்க வந்தது. இருந்தாலும் பல்வேறு இன்னல்களை தாண்டி தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் இரண்டு நாட்களாக சிக்கி தவித்து வந்த நாயை சுமார் மூன்று மணி நேரம் போராடி மீட்டனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு ஆகாயத்தாமரை மீதும் மரகிளைகளின் மீதும் தஞ்சமடைந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். நீரின் ஓட்டம் அதிகமாக இருந்த போதும் இடைவிடாமல் போராடி நாயை தீயணைப்பு துறையினர் மீட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கைத்தட்டி அவர்களை பாராட்டினர். 

பின்னர் பெண் நாயாக இருந்ததால் அதற்கு ராணி என்று பெயர் சூட்டிய பொதுமக்கள் தற்போது அதை பராமரித்து வருகின்றனர். 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் வந்த போதும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கயிறுகளை கட்டி நாயை மீட்ட திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் அனந்தகிருஷ்ணன், சதீஷ்குமார், செல்வம், ஹரிஹரன், துரைராஜ், சதீஷ், மணிகண்டன், மற்றும் 10க்கும் மேற்பட்ட குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

ஐந்தறிவு உள்ள ஜீவனே ஆனாலும் அதுவும் ஒரு உயிர் தானே என்று எண்ணியே, துணிந்து சேறும், சகதியுமான இடங்கள் என்றும் பாராமல் நீர் ஒருபுறம் இழுத்தாலும் அந்த நாயை காப்பாற்றியுள்ளோம் என பெருமிதத்துடன் கூறினர் தீயணைப்பு வீரர்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close