[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

'ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்' - எடப்பாடி பழனிசாமி

62-dams-in-rs-292-crores-edappadi-palanisamy

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் பின் பேசிய அவர் வெள்ள நீரை சேமிக்க முதல்கட்டமாக 292 கோடி ரூபாயில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார்

Also Read -> ஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்

Also Read -> 150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்

Also Reaf -> ஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு  

பவானியில் தனது ஆய்வை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட காளிங்கராயன் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்ற அவர், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட அதிகாரிகளுடன் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

Also Read -> 'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்

Also Read -> வி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது

Also Read -> “வாஜ்பாய்க்கு இரங்கல் இல்லையா!” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்  

ஆய்வுக்குப் பின் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 499 பேர் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு தேவையான உணவு, குடிநீர், உடை, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்ற முதல்வர், பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  வெள்ள நீரை சேமிக்க முதல்கட்டமாக 292 கோடி ரூபாயில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close