[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

காவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்

red-alert-to-the-coastal-people-of-cauvery-basin

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்திற்கு அதிமாக தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஏற்கனவே முழுக் கொள்ளவை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து முழுவதும் அப்படியே 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவதால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

குறிப்பாக மேட்டூரிலிருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து மேலும் அதிகளவில் தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் அனல் மின் நிலையத்தை ஒட்டிய எடப்பாடி பிரதான சாலை மற்றும் காவிரி ஆற்று பாலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரி கரையோரங்களில் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகளவு நீர்வரத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அதிகபட்சமாக  வினாடிக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close