[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

தாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்

a-chennai-cop-acted-swiftly-to-save-a-road-accident-victim

விபத்தில் அடிப்பட்டு, ஆம்புலன்ஸ் வராததால், உயிருக்கு போராடியவரை மீட்டு, தமது வாகனத்திலேயே அழைத்து சென்று மருத்துவ மனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வில்லிவாக்கத்தை சேர்ந்த கமலகண்ணன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.அங்கிருந்த பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அப்போது, புழல் சிறையில் குற்றவாளி ஒருவரை அடைத்து விட்டு, அந்த  வழியாக அண்ணாநகர் காவல் ஆய்வாளர் சரவணன் தமது காவல் வாகனத்தில் சென்றுள்ளார். 

                                    

மக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு, வாகனத்தை நிறுத்தி விவரம் கேட்க, படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர்  கிடக்க,  ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதை அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். சிறிதும் தாமதிக்காத, ஆய்வாளர் சரவணன், தமது வாகனத்திலேயே விபத்தில் அடிப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்தவரை தூக்கி, தமது மடியிலேயே வைத்து, ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். முதலுதவி செய்த பின், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்.விபத்து ஏற்பட்ட  உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தால் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.ஆய்வாளரின் இந்தசெயல் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close