[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

road-and-rail-traffic-has-been-cut-off-in-a-few-places-due-to-flooded-water-from-the-dam

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு சில இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அணை நிரம்பியது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,65,000 கன அடியாக இருந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து சுமார் 1,70,000 கனஅடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.4 டிஎம்சியாகவும் உள்ளது. 

மேலும் தொடர்ந்து காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து 2,00,000 கனஅடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையெடுத்து அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரி கரையோர கிராமங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை ரத்து

தென் மாவட்டத்தில் இன்றும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல அணைகளின் நீர்மட்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் பரளியாறு, குழித்துறையாறு, வள்ளியாறு, பரளியாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்‌‌ பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் இரவு முதல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் தமிழகம்- கேரளா இடையே 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம்- கேரளா ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close