[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-some-of-the-districts-of-tamilnadu

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‌வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே கடல்பகுதியில் நீடித்து வருகிறது. அதனால் மேற்கிலிருந்து வரும்‌ ஈரப்பதமான காற்று தமிழகத்தின் வழியாகச் செல்வதால், கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திர கடற்கரை மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close