[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

due-to-heavy-rain-kanyakumari-school-and-colleges-will-be-holidays-16-8-2018

கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமின்றி கடலோர பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இரவு முழுவதும் நீடித்த மழையால்  அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 406 கனஅடி தண்ணீர் வருகிறது.  

இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இன்று காலையிலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தபடி இருந்தது. பலத்த காற்று காரணமாக வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன. தொடர்ந்து  பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close