[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

கொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து

kollam-sengottai-route-all-trains-cancelled

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் மழை இன்னும் ஓயவில்லை. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொல்லம்- செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேளராவிற்கு தற்போது யாரும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க நாட்டு மக்களை அந்நாட்டு அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close