[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’

the-unpopular-human-life-has-been-saved-in-coimbatore

சாலையில் ஆதரவற்று இருந்த மனிதரின் வாழ்க்கையை புதிப்பித்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

கோவையிலுள்ள சாலைகளில் ஜடா முடியுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூற பெற்ற ஒருவரின் வாழ்க்கையை தன்னார்வலர் ஒருவர் சில மணி நேரத்தில் மாற்றியுள்ளார்.  மேலும் தன்னை விரட்டியடித்த மக்களுக்கே தனது கையால் உணவளிக்க வைத்த நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறி உள்ளது.

சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன் சாலையில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டும் வாழ்ந்து வந்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி. இந்தக் கிருஷ்ணமூர்த்தியை உறவினர் எல்லோரும் கை விட்டதால் இந்த அவலநிலை அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை தினமும் கடந்து செல்லும் மனிதர்கள் மனநோயாளி எனக் கூறி அவரை மனிதராககூட பொருட்படுத்தாதமல் அடித்து விரட்டியுள்ளனர். 

இந்நிலையில் இவரை கண்ட‘ஈரநெஞ்சம்’என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன், இவரது நிலையை மாற்ற வேண்டும் என்று நோக்கத்தில், இவரது முடியை திருத்த முற்பட்டனர். ஆனால் அதனை ஆரம்பத்தில் அனுமதிக்காத கிருஷ்ணமூர்த்தி, பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்பு அவரது முடி திருத்தப்பட்டு புத்தாடைகளும் அணிவித்துள்ளனர். அதற்குப்பின் இவரது நடத்தை முற்றிலும் மாறுபட்டு சாதாரண மனிதர்களை போலவே கிருஷ்ணமூர்த்தி மாறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தன்னோடு வைத்து கொண்டார் மகேந்திரன். இவருடன் பழகியதை அடுத்து கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை கேட்டறிந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி இறந்தவர்களுக்கு சடங்கு செய்பவராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் ஊர்க்காரகள் பிணத்திற்கு சங்கு ஊதுபவர் எனக்கூறி இவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

தாய், தந்தையின் மறைவு இவரை பெரிதும் பாதித்துள்ளது. இத்தகைய சூழலில் உறவினர்களும் கைவிட்டதால் தனிமை மட்டுமே இவருக்கு துணையானது. யாரிடமும் பிச்சைக் கேட்க மனம் இல்லாத இவர், பசிக்குபோது குப்பை தொட்டியில் கிடைப்பதை உண்டு வாழ்ந்து வந்துள்ளார். காலப்போக்கில் தோற்றம் மாறி மனநிலை பாதித்தவர்போல ஆகியிருக்கிறார். அந்த மனிதரைதான் மகேந்திரன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு இன்றைக்கு திருப்பி இருக்கிறார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close