[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

நான் திமுகவுக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை மு.க.அழகிரி

stalin-does-not-want-him-into-the-dmk-mk-alagiri

திமுகவின் தற்போதைய தலைவர்கள் கட்சியை அழித்துவிடுவார்கள் எனக் கூறிய மு.க.அழகிரி, கருணாநிதியின் ஆன்மா அவர்களை தண்டிக்கும் என்றும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார். கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என்றும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

இந்நிலையில் ‘டைம்ஸ் நவ்’-க்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில், “ நான் திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நிறைய திமுக நிர்வாகிகள் ரஜினியுடன் தொடர்பில் இருக்கின்றனர். திமுகவின் கட்சி பதவிகள் விற்கப்படுகின்றன. திமுகவின் தற்போதைய தலைவர்கள் கட்சியை அழித்துவிடுவார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் ஆன்மா அவர்களை தண்டிக்கும்” எனக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close