[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

நடிகர் விக்ரம் மகன் சென்ற கார் மோதி ஆட்டோக்கள் சேதம்

actor-dhruv-s-car-met-with-accident

நடிகர் விக்ரம் மகன் துருவ் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன.ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நடிகர் விக்ரமின் மகன், துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடத்துவருகிறார். ’வர்மா’ என்ற இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

(விபத்தை ஏற்படுத்திய கார்)

இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து காரில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது 

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவர்களில் வருண் என்பவரை அங்குள்ளவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது போதை யில் இருந்த அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

விபத்து பற்றி விசாரித்த போலீசார் விக்ரம் மகன் துருவை பிடித்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்த அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close