[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

justice-vijaya-kamlesh-tahilramani-to-be-chief-justice-of-madras-high-court

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி நாளை பதவியேற்கவுள்ளார்.

கடந்த 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்தவர் தஹில் ரமணி. 1982ஆம் ஆண்டு ஜூலையில் மும்பை மற்றும் கோவா பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார். கீழ் நீதிமன்றங்களிலும் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். தந்தையுடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்த தஹில்ரமணி, பல கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பின்னர் அவர் மஹாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் பணியாற்றினார். 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுவரை பகுதி நேர பேராசிரியராக சட்டக் கல்லூரி ஒன்றில் இவர் பணியாற்றியுள்ளார். 

1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரக 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், பல வழக்குகளில் வெற்றி தேடித்தந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில்ரமணி, பின்னர் அந்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தஹில்ரமணி பெற்றுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close