[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன்; நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு - உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
  • BREAKING-NEWS மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும் - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS குக்கர் சின்னத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என உறுதியாக நம்புகிறோம் - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
  • BREAKING-NEWS Videocon நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐயின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு
  • BREAKING-NEWS ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு

மோமோவை கலாய்த்த மீம் கிரியேட்டர்கள்..!

momo-games-memes-in-social-media

மோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உண்டாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக உலா வருகின்றன.

சில மாதங்களுக்கு முன் ப்ளுவேல் கேம் என்ற விளையாட்டு இளையதலைமுறையை குறிவைத்து தாக்கியது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. சிலர் விளையாட்டுக்கு அடிமையாகி உயிரிழந்தனர். தற்போது கிகி சேலஞ்ச் என்ற விளையாட்டும் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் மீண்டும் ஏற வேண்டும். கிகி சேலஞ்சால் விபத்துகள் நிகழ்வதால் கிகி சேலஞ்ச் மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மோமோ சேலஞ்சும் இளைய தலைமுறையை அதிகம் குறிவைக்கிறது. இதுபற்றி நீங்கள் முன்பின் அறிந்தது உண்டா..? முதலில் அதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் ஒரு லிங்கில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு இருந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன்னிறுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது. அந்த ஏலியன் உருவமுள்ள பெண்ணின் பெயரே 'மோமோ'. முதலில் ஃபேஸ்புக்கில் வலம் வந்த மோமோ கேம் தற்போது வாட்ஸ் அப்பிலும் வைரல் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விளையாட்டில் மனநிலையை பாதிக்கும் வகையில் பல புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. அதன்பிறகு அந்தரங்கம் தொடர்பான கேள்விகளை கேட்டு டாஸ்க் தொடங்குகிறது. குறிப்பிட்ட சவாலை ஏற்காதவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டும். இதுதான் மோமோ சேலஞ்ச் டாஸ்க். அப்படி சவாலை ஏற்கவில்லை என்றால் செல்போனில் இருக்கும் தகவல்களும், நம்மிடமிருந்து பெறப்பட்ட அந்தரங்க தகவல்களும் வெளியிடப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டு ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில் வைரலாகி வருகிறது. மோமோ சேலஞ்சை மேற்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டிலோ இது கொஞ்சம் வித்தியாசம். மோமோ சேலஞ்சை பற்றி எங்களுக்கு பயமில்லை. மோமோ சேலஞ்சே எங்களை பார்த்து பயந்து தலைதெறிக்க ஓடிவிடும் என்கிற அளவிற்கு மீம் கிரியேட்டர்கள் அதனை வெச்சு செஞ்சுள்ளனர்.

மீம் உண்டாக்க சின்ன விஷயம் கிடைக்காதா என ஏக்கித் தவிக்கும் மீம் கிரியேட்டர்களுக்கு தற்போது மோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் உருவமுள்ள பெண்தான் முழுத் தீணியாக உள்ளது. விதவிதமான மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

ஒரு மீம்ஸில் மோமோ பெண், சேலஞ்ச் நம்பர் 1 எனக் கூறிக்கொண்டு உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு கேட்கிறது. அதற்கு நம்மாட்கள் நான் அதற்கு முன் ஒரு சேலஞ்ச் சொல்கிறேன் எனக் கூறி சேலஞ்ச் கொடுக்கின்றனர். அதில் தமிழ்நாட்டில் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இசிஇ முடித்துவிட்டு நல்ல வேலைக்கு போகுமாறு சேலஞ்ச் விடுக்கப்படுகிறது. இதனையறிந்த மோமோ தலைதெறிக்க ஓடுகிறது. இப்படி அந்த மீம்ஸ் உண்டாக்கப்பட்டுள்ளது.

அடுத்த மீம்ஸில், மோமோ சார்பில் பேசுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனையறிந்த நம்மாட்கள், ஒஹோ மீம்ஸ்க்கு கான்சப்ட் கிடைச்சிடுச்சு என குதூகலமாகி விடுகின்றனர். அடேய்களா நான் ஹேக்கர் டா.. எனக் கூறி மோமோவே தன்னை நொந்து கொள்ளும்படி மீம்ஸ் உண்டாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கெத்தாக இருந்தா மோமோ தமிழ்நாட்டில் ஜோக்கராக மாறிவிட்டதாகவும் மீம்ஸை தெறிக்கவிட்டிருக்கின்றனர்.

ஹேக் செய்ய வந்த மோமோ ஏலியன் பெண்ணை, ‘கோழிக் குண்டு கண்ணு, கோவப் பழ உதடு’ என வர்ணித்தும் மீம்ஸ்கள் உண்டாக்கப்பட்டுள்ளன.

ரகசியத்தை சொல்லி அச்சுறுத்தலாம் என வந்த நம்மை இப்படி கலாய்து தள்ளுகிறார்களே என மோமோ பெண்ணே வேதனைப்படும் அளவில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.

நம்மவர்களின் கலாய்ப்புக்கு தாங்க முடியாமல் நான் தமிழ்நாட்டை விட்டே போய்டுறேன் என மோமோ பெண் சொல்கிறது. அதற்கு அதை எல்லாம் நீ ஏன் சொல்ற.. நீ என் டார்லிங் என பிரகாஷ் ராஜ் கில்லி படத்தில் த்ரிஷாவை பார்த்து சொல்வது போன்ற மீம்ஸ்கள் உண்டாக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஏராளமான மீம்ஸ்கள் மோமோ பெண்ணை வைத்து உண்டாக்கப்பட்டுள்ளன. இது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நொறுக்குத் தீனியாகவும் பார்ப்பவர்களுக்கு சொல்ல முடியாத அளவிற்கு சிரிப்பையும் உண்டாக்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close