[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

rain-warning-in-chennai

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் இருந்தே பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது. கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close