[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மிரட்டும் கனமழை ; பரிதவிக்கும் கேரளம்

kerala-rains-death-toll-rises-to-32

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் பாதி பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கொல்லம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. சாலைகள் துண்டானதால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் உள்ளனர். கொச்சி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. 

50 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ள பாதிப்புகள் உள்ள நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தத்தளித்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 22 அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இடுக்கி அணையின் 5 மதகும் 26 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது.

அணைகள் திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளமாக ஓடுகிறது. 40 ஆறுகளும் கரை புரண்டு ஓடுகின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார். 

கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பல வீடுகள் தீவு போன்று ஆகியுள்ள நிலையில் ராணுவத்தினர் தற்காலிக பாலங்கள் அமைத்து அவர்களை மீட்டு வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் மீட்புப் பணிகளில் உள்ள நிலையில் அப்பணிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டார், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். மேலும் பாதிப்புகளை பார்வையிட அவர் நாளை கேரளா வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close