[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

மேட்டூர் நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

water-released-from-mettur-dam-warning-issued-river-bond-people

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட‌ நீர் நாளைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 311 கன அடியாகக் குறைந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 50 அடியாக உள்ளது. 

         

இதனிடையே, மேட்டூர் அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேட்டூர் பி.என்.பட்டியில் உபரிநீர் போக்கி பகுதியிலுள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கமாபுரி பட்டணம், பெரியார் நகர், சேலம் கேம்ப், நவபட்டி பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

           

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close