[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்”  உருகும் டிரைவர்

driver-who-drove-ambulance-to-karunanidhi-jayalalitha-same

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் (வயது 58).  இவர் ‘ஹோமேஜ்’ என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை அவர் தனது கடமையாக கருதி செய்து வருகிறார். 

அந்த வகையில், இப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடலை தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடிப் பெட்டியில் வைத்து,  ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச்சென்றவர், பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார்தான். ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் சாந்தகுமார் ஓட்டிச்சென்றார். புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவாட்’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.

       

முன்னதாக ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவரும், சாந்தகுமார்தான்.

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு முதலமைச்சர்களின் இறுதி பயணத்திலும் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி, பெரும்பங்காற்றியது குறித்து சாந்தகுமார் கூறுகையில், “1977-ம் ஆண்டு ‘ஹோமேஜ்’ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். முக்கிய தலைவர்கள் இறக்கும்போது நானே அமரர் ஊர்தியை இயக்குவதை என் பாக்கியமாக கருதுகிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு நான்தான் அமரர் ஊர்தி இயக்கினேன். இப்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதிப் பயண ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி இருக்கிறேன்.

    

 மாபெரும் தலைவர்கள் வாழும்போது அவர்களுடன் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் மறைந்த பிறகு, அவர்களது உடல் அருகே இருந்து பணி செய்வதை கடவுள் எனக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன். தலைவர் கருணாநிதிக்கும் பக்தி கலந்த மரியாதையுடன் இதைச் செய்து உள்ளேன்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close