[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

மறக்க முடியுமா கருணாநிதியை...!

list-of-achievements-for-dmk-chief-m-karunanidhi

* 1969ல் அண்ணா மறைவுக்குப் பிறகு, திமுகவின் தலைமைக்கு யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி முன்னின்றார். எம்ஜிஆரின் உதவியும் சேர்ந்துகொள்ள, 45 வயதில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி.

* தமிழக வரலாற்றில் நீண்டகால முதல்வர் கருணாநிதிதான். 1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 1971ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். பின்னர் மீண்டும் 1971 மார்ச் 15ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற அவரது ஆட்சி, 1976 ஜனவரி 31ம் தேதி கலைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1989 ஜனவரி 27ல் கருணாநிதி முதல்வரானார். அந்த ஆட்சியும் 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கலைக்கப்பட்டது. பின்னர் 1996லும், 2006ம் ஆண்டிலும் ஆட்சியமைத்து முழுவதுமாக 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தார்.

* 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்த கருணாநிதி தனது 14 வயது முதல் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தவர். தமிழக சட்டமன்றத்துக்கு முதன் முதலில் 1957ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒருமுறை கூட தோற்காத ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே.

* மத்திய- மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய 1969ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ராஜமன்னார் குழு அமைத்து உத்தரவிட்டார். நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திராரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழு 383 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை 1971ம் ஆண்டு மே 27ம் தேதி அளித்தது. மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பரவலாக்கி, மாநிலங்களின் அதிகாரங்களை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது. நாட்டிலேயே இப்படி ஒரு குழுவை ஒரு மாநில அரசு அமைத்தது இதுவே முதன்முறை.

* மாநிலத்துக்குத் தனி கொடி வேண்டும் என்ற போராட்டத்தை முதலில் தொடங்கியவர் கருணாநிதி. அதன் முடிவாகத்தான், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குத் தர வேண்டுமென அப்போதைய பிரதமர் இந்திராவிடம் கோரினார். அதை இந்திராகாந்தியும் ஏற்றதன் விளைவாகவே, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் தேசியக் கொடியேற்றுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close