[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

கருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி: ஸ்டாலின், கனிமொழிக்கு ஆறுதல்!

pm-modi-pay-his-last-respects-to-karunanidhi

மறைந்த, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் சென்றார்.

அங்கிருந்து காரில், கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு வந்தார். அங்கு அவரை பாஜக தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உட்பட பலர் வரவேற்றனர்.

பின்னர், கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட் ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிரதமருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் உடன் வந்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close