[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் கண்ணீர் மல்க இரங்கல்

vijayakanth-emotional-tribute-from-america

கருணாநிதி மறைவை அடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் ’திமுக தலைவர் மறைந்தார் என்பதை என்னால் தாங்க முடியவில்லை. அதை நம்ப முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 5 முறை முதல்வராக இருந்தார். ஐந்து முறையும் கட்டுப்போக்காக ஆட்சியை நடத்தினார். நான் அமெரிக்காவில் இருந்தால் கூட, என் எண்ணங்களும் நினைவுகளும் கலைஞரிடம் தான் இருக்கிறது’ என்று கண்ணீர் விட்டு அழுதார் விஜயகாந்த்.

அவருடன் இருந்த பிரேமலதா, ‘கலைஞர் ஐந்து முறை தமிழகத்துக்கு முதல்வராக இருந்திருக்கிறார். அவர் குடும்பத்தாருடன் பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. நாங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் எங்கள் எண்ணங்களும் நினைவுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அவரது இறுதிசடங்கில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று நினைக்கிறபோது மனம்  வேதனையாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close