சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார்.
கருணாநிதி மறைவு குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். எவ்வளவு தீவிர சிகிச்சை அளித்தும் கருணாநிதியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “நாட்டின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவைக் கேட்டு துயரமடைந்தேன். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர்.
அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு பலமுறை கிடைத்துள்ளது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அவர் எடுத்து தையரியமான முடிவு எனது நினைவிற்கு வருகிறது. கருணாநிதி ஜி-யின் குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!
“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..!
“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..!
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !