[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

காவேரி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு - 4.30க்கு மருத்துவ அறிக்கை வெளியாகிறது

the-full-police-force-around-cauvery-hospital

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் இருப்பதாகவும் நேற்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அடுத்த 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணித்துதான் எதையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறப்பட்டது. 

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். “வா..வா தலைவா, எழுந்து வா தலைவா” என்று தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தொண்டர்கள் குவியத் தொடங்கியதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் ஏராளமான காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.  

இதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை மாலை 4.30 மணியளவில் புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் இதுவரை 5 அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close