[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

மகனை எரித்துக் கொன்ற தந்தை !

father-arrested-for-killing-his-son

மண்டலமாணிக்கம் அருகே போதைக்கு அடிமையான மகனை கொலை செய்து தடயத்தை இரவோடு இரவாக எரித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை  அடுத்த முத்துப்பட்டியில் போதைக்கு அடிமையாகி தினந்தோறும் தொல்லை செய்து வந்த  மகனை வெட்டி  கொலை செய்து தடயத்தை மறைக்க இரவோடு இரவாக உறவினா்கள் உதவியுடன் சடலத்தை எரித்த வழக்கில்  தந்தையை கைது செய்து,  உறவினா்கள் 10க்கும் மேற்பட்டோரிடம்  போலீசார் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை  அடுத்த முத்துப்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணி என்ற மணிகண்டன். இவர்  கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பா்களுடன் சோ்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைக்கண்டிக்கும் தந்தை பாலசுப்பிரமணியனுடன் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.  

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையிடம் தகராறு செய்துள்ளார் மணி. இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை பாலசுப்பிரமணியன் தனது மகன் மணியை  அாரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த தந்தை பாலசுப்பிரமணி, உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்று நள்ளிரவில் மணியின் உடலை அம்மன்பட்டியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எாரித்து கொலையையும், கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளனா்.

ஆனால், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மண்டலமாணிக்கம் போலீசார் எாரிக்கப்பட்ட மணியின் மண்டை ஒடு, எலும்பு உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றியதுடன், தந்தை பாலசுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது உறவினா்கள் 10க்கும் மேற்பட்டோரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனா். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close