[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

“கருணாநிதியின் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால்” - அறிக்கை 

karunanidhi-s-health-declining-next-24-hours-crucial-says-latest-medical-bulletin-india-prays-for-dmk-chief

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதனையடுத்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே கருணாநிதியின் உடல்நிலையில் லேசாக பின்னடைவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. நேற்று குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சந்தித்து சென்ற பின்னரும் புகைப்படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை தற்போது புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

அந்த மருத்துவமனை அறிக்கையில்,“கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பதில் சவால் உள்ளது.  அவர் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

போட்டோ கேலரி

1 of 3

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close