[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

தாக்கலாகுமா உள்ளாட்சி தேர்தல் அட்டவணை?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

is-local-body-election-schedule-will-file-in-high-court

தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும் என்றும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காலக்கெடுவுக்குள் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு சட்டப்பிரிவு 28-ன் கீழுள்ள பிரிவுகளை தமிழக அரசு நீக்கியதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடியாததுமே காரணம் என விளக்கமளித்திருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

மேலும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் அமர்வு முன் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close