[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

வெளியூர் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம்: கனிமொழி அறிவுறுத்தல்

dmk-cadres-can-go-to-home-town-kanimozhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம்  என கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். காவேரி மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்களும் நாள் கணக்கில் காத்து கிடக்கின்றனர். வெளியூரில் இருந்து வந்த திமுக தொண்டர்களும் இதில் அடங்குவர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளதால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம்  என கனிமொழி தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close