[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம்: அதிர்ச்சி வீடியோ 

a-hospital-employee-as-bribery-of-handover-the-death-body-has-shocked

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ஆயிரத்து 200 ரூபாய் லஞ்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பனியன் தொழிலாளி முருகன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 29 ஆம் தேதி உயிரிழந்தார். ஏழைக்குடும்பம் என்பதால் சமூக அமைப்பினர் முருகனின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தனர். இந்நிலையில் அவரது உடலை ஒப்படைக்க மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூட ஊழியர் ஒருவர் ஆயிரத்து 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் பணம் கொடுக்க முடியாது என உடல் கோரிய அமைப்பினர் ஊழியரிடம் வாக்குவாததில் ஈடுபட்டனர். மேலும் அப்போது காவல்துறையினரும் பணம் கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். பணம் கொடுக்க மறுத்த உறவினர்களும், சமூக  அமைப்பினரும், அங்கிருந்த அதிகாரியிடம் புகார் தெரிவித்த பின்னர், பணம் தராமல் உடலை வாங்கி சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து  உடலை ஒப்படைக்கு லஞ்சம் வாங்கும் சூழல் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போன்று ஊழியர் லஞ்சம் பெற்ற காட்சி புதிய தலைமுறையில் பிரத்யேகமாக காட்சி படுத்தப்பட்டு லஞ்சம் கோரிய ஊழியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவனை டீனை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close