[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

தம்பி மகளிடம் பாலியல் தொல்லை ! அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்

daughter-sexual-harassment-father-killed-by-brother

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் கிராமத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முன்விரோதம் காரணமாக அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தம்பி தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் கிராமத்தில் முதலியார் தெருவில் வசித்து வந்தவர் திருமால் வேதநாராயணன்(41). அவருடைய தம்பி ரவீந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மெய்யூர் கிராமத்தில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றதாக தெரிகிறது. திருமால்வேதநாராயணன் தனது தாயார் மற்றும் மகளுடன் மெய்யூர் கிராமத்திலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிறுநீர் கழிப்பதற்காக திருமால்வேதநாராயணின் தாயார் மற்றும் மகளும் வீட்டின் பின்னால் சென்றதாக கூறப்படுகிறது. 

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது திருமால்வேதநாராயணின் தம்பி ரவீந்திரன் வீட்டினுள் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால், முதலில் அடையாளம் தெரியாமல் இருந்த வேதநாராயணின் தாயும், மகளும் ஓடியது  ரவீந்திரன் தான் என உறுதி செய்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தப்போது திருமால்வேதநாராயணன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது. 

இதனையடுத்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், அவரது தாயார் லலிதா(61) அளித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறும்போது கொலை செய்யப்பட்ட திருமால்வேதநாராயணன், தன் தம்பி ரவீந்திரனின் மகளுக்கு  2016ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்து, கல்பாக்கம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். தன் மகளை  பாலியல் தொல்லை அளித்த விரோதத்தின் காரணமாக ரவீந்திரன், அண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், சம்பவம் நடைபெற்ற வீட்டினுள் இருந்து அவரது தம்பி தப்பியோடியதை உடனிருந்து நபர்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அதனால், ரவீந்திரனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close