[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதியின் முகம் தெரியும் புகைப்படம் வெளியீடு

congress-leader-rahul-gandhi-meet-karunanidhi-photo-released

திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையில் ‌திமுக தலைவர் கருணாநிதி 4ஆவது‌ நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ‌28ஆம் தேதி ம‌ருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், உடனே அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் கருணாநிதியை நேரில் சந்தித்து ராகுல் காந்தி நலம் விசாரித்தார். இச்சந்திப்பின் போது மு.க.ஸ்டாலின், தயாநிதிமாறன் உடனிருந்தனர். அதற்கான புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close