[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

டைவர்ஸ் கேட்ட மனைவிக்கு இப்படியும் அதிர்ச்சி கொடுத்த கணவன்!

facing-divorce-man-stars-in-porn-video-send-it-to-in-laws

ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத் லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் விபாவசு (32). இவருக்கும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அனுஷா (27) என்பவருக்கும் 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு. இதனால் அனுஷா, கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் அவர்களை சேர்த்து வைக்க பலமுறை முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளார் சனுஷா. அந்த மனுவில் அவர், தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளாராம். இது குறித்து உறவினர்களிடமும் அனுஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அனுஷாவின் உறவினர்கள் விபாவசுவை தவறாகப் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான அவர், தான் ஆண்மையுள்ளவன் என்பதை நிரூபிக்க முடிவு செய்தார். அதன்படி மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை அனுஷா வின் அப்பா, அவரது உறவு பெண் ஆகியோருக்கு, ’என்னயா ஆண்மை இல்லாதவன்னு சொல்றீங்க?’  என்று அனுப்பி வைத்துவிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் ஐதராபாத்துக்கு சென்று விபாவசுவை கைது செய்து விசாரித்தனர். அவர் அந்த வீடியோவை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close