[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஆண்கள் பங்கேற்கும் விநோத திருவிழா - கிணற்றில் விழுந்த பெண் கதை

namakkal-men-festival-300-thousand-gens-participate

ராசிபுரம் அருகே 100 ஆண்டுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மிகவும் பழைமைவாய்ந்த பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. கோயிலின் திருவிழா வருடந்தோறும் ஆடிமாதம் 3 -ம் ஞாயிற்றுகிழமை நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் பெண்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பது ஐதீகம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடைபெறும்போது கனத்த மழை பெய்து பெண் ஒருவர் அருகிலிருந்த கிணற்றில் விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து அடுத்து வந்த திருவிழாக்களில் பெண்கள் யாரும் இதில் பங்குகொள்வதில்லை என்பது வாய்வழி செய்தியாக உள்ளது. இந்தத் திருவிழாவின்போது விநாயகர் பூஜை மற்றும் நள்ளிரவில் பொங்கலாயி அம்மனுக்கு மலையாள புசாரி பூஜைகள் செய்யப்படுகிறது. அத்துடன் வேண்டுதலுக்காக கொண்டுவரப்பட்ட ஆட்டுக் கிடாக்களை வெட்டி கறி சமைத்தனர். முன்னதாக சுமார் 1000 கிலோவுக்கும் மேலான அரிசியை பொங்கல் வைத்து, அதை உருண்டையாக செய்து பொதுமக்களை அமரவைத்து சமபந்தி விருந்து படைத்தனர். இந்தக் கோயிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடைநீக்கம், குழந்தை பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து விடுபடுதல் போன்றவைகள் நிவர்த்தி பெறுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் இராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close