[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

காரை தாக்கிய ஒற்றை யானை ! பயணிகள் 'திக் திக்'

the-elephant-was-hit-by-a-car-on-the-road-near-gudalur-last-night

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நேற்று இரவு சாலையில் சென்ற காரை காட்டு யானை தாக்கியது. இதில் காரில் பயணித்த குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது நண்பருடன் கோவை சென்று கூடலூர் திரும்பியுள்ளார். கார் ஊட்டி சாலையில் உள்ள சனிபகவான் கோவில் அருகே வந்த போது, கடும் பனிமூட்டமாக இருந்துள்ளது. இதனால் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையை ராமச்சந்திரன் கவனிக்கவில்லை.

சற்றும் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்த காட்டு யானை ஒன்று காரை தாக்கியுள்ளது. இதில் சார் ஓட்டுனர் அமர்ந்திருக்கும் பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரின் உள்ள இருந்த கைக்குழந்தை உட்பட 4 பேரும் காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். அந்த சாலை வழியாக வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் யானைகளை விரட்டி, 4 பேரையும் காப்பாற்றியுள்ளனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close