[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

உடன்பிறப்பே எழுந்து வா ! காவேரியில் எழும் கோஷம்

dmk-volunteers-who-encourage-karunanidhi-outside-the-hospital

திமுக தலைவர் கலைஞர். மு. கருணாநிதி மூன்று நாட்களுக்கு முன் உடல் நலிவுற்ற நிலையில் நேற்று அதிகாலை கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். காவேரி மருத்துவமனையில் குழுமிய திமுக தொண்டர்கள் தங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் மீண்டு வர வேண்டும் என ஓயாது முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.முழக்கங்களை அங்கிருந்த பெண்கள் முழக்கமிட ஆண்கள் அதனை வழிமொழிந்து முழக்கமிட்டனர். அதில் சில முக்கியமான முழக்கங்கள்...

உடன்பிறப்பே! உடன்பிறப்பே! எழுந்து வா உடன்பிறப்பே!
 பெண்ணுரிமை நிலைநாட்ட எழுந்து வா உடன்பிறப்பே!
 சமூகநீதி நிலைநாட்ட எழுந்து வா உடன்பிறப்பே!
 எழுந்து வா! எழுந்து வா! எங்கள் தலைவா எழுந்து வா!
 எழுந்து வா! எழுந்து வா! காவேரியை விட்டு எழுந்து வா!
 அறிக்கைக் கொடு! அறிக்கைக் கொடு! காவேரி மருத்துவமனை குறித்து அறிக்கைக் கொடு 


என்று திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் செயல்பாடுகளை கொண்டு பெண்கள் முழக்கமிட்டனர். முழக்கமிட காகிதங்கள் கையில் இல்லை! தன்னெழுச்சி முழக்கங்களில் கூட கலைஞர் கருணாநிதி அவர்களின் செயல்பாடுகளே முன் நிற்கிறது!.. தந்தை பெரியார் தோழர்களே என்று தொடங்குவார்,பேரறிஞர் அண்ணா அன்பு தம்பிகளே என்று எழுதுவார்!.. கலைஞர் எல்லோரையும் சமமாக கருதும் வண்ணம் அன்பு உடன்பிறப்புகளே என்றெழுதுவார்!

அதன் பலன் தனது தலைவரை தலைவர் என்று கருதாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி உடன்பிறப்பே எழுந்து வா என்று முழக்கமிட்டு அழைக்கின்றனர்! உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வரும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் மு.க. கருணாநிதி தனது உடன்பிறப்புகளை விரைவில் சந்திக்கட்டும்.

 

கட்டுரை; முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close