[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

கருணாநிதி புகைப்படம் வெளியீடு : வெங்கையா நாயுடு, பன்வாரிலால் சந்திப்பு

vice-president-venkaiah-naidu-meet-dmk-leader-karunanidhi-photo-released

திமுக தலைவர் கருணாநிதியை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் நலக் குறைவு காரணமாக கருணாநிதி  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயது முதிர்வு காரணமாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, காவேரி மருத்துவமனை சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஐசியு-வில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை அவர்கள் பார்த்தனர். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close