[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

புலிகள் மகிழ்ச்சியாக வாழும் நீலகிரி !

most-of-the-tigers-living-in-nilgiris-district

இந்தியாவில் அடர்த்தி கொண்ட புலிகள் காப்பகமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திகழ்ந்து வருவதால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 1970ம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 40 ஆயிரம் புலிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின் நடைப்பெற்ற புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதை கண்டறிந்து இதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த அழிவி்ற்கு முக்கிய காரணமாக காடுகளை அழித்தும், வனவிலங்குகளை வேட்டையாடியும், விஷம் வைத்ததில் தான் புலிகளும் அழிந்து உள்ளது தெரிய வந்தது. இதன் காரணமாக அழிந்து வரும் பட்டியலில் புலிகள் சேர்க்கப்பட்டது.

இதற்கு பிறகு புலிகள் காப்பக திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி கடந்த1973ம் ஆண்டு பனாமா என்ற இடத்தில் தான் முதன் முதலாக புலிகள் காப்பகம் துவக்கப்பட்டது. அதன் பின்னரும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகளின் எண்ணிக்கை சுமார் 2300 என்ற அளவில் தான் இருக்க கூடும் என கணகிடப்பட்டது. அதன் பின் புலிகளை பாதுகாக்க அரசியல்வாதிகள், கல்வியாளார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்களை இணைத்து புலிகள் பாதுகாப்புதிட்டங்களை அமல்படுத்தியது.

1980களில் புலிகள் காப்பகங்களில் 9115 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக இருந்தது. இது 13 ஆயிரம் சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது இந்தியாவில் 48 புலிகள் காப்பகம் உள்ளது. இந்த புலிகள் காப்பகங்களில் புலிகளை மட்டும் பாதுகாக்காமல் அதற்கு உணவான மான், காட்டெருமை, கடமான் மற்றும் தாவர வகைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதால் தற்போது புலிகளின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்தியாவில் அடர்த்தி கொண்ட புலிகள் காப்பகமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 321 சதுர கிலோ மீட்டரில் துவங்கப்பட்டு, தற்போது 367 சதுர கிலோ மீட்டர்வரை புலி நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக 58 புலிகள் வரை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் தற்போது களக்காடு முண்டந்துறை, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை, சத்தியமங்கலம், உள்ளிட்ட 4 புலிகள் காப்பகத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வயதான காலத்தில் வேட்டை ஆட முடியாமல் ஊருக்குள் வரும் புலிகளை சுட்டுக் கொள்ள பொது மக்கள் போராடுவதால் சில நேரங்களில் வனத்துறையினர் இவற்றை சுட்டுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

இது போன்று ஊருக்குள் வரும் புலிகளை மீண்டும் வனத்திற்குள்ளாகவோ அல்லது வன உயிரன பூங்காவிலோ வைத்து பாது காப்பதன் மூலமும், வனத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் சொகுசு பங்களாக்களை கட்டுப்படுத்துதல் மூலமாகவும், அழிவின் பிடியில் இருந்து புலிகளை காப்பாற்ற முடியும் என்றுவன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்கள்;ஜான்சன்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close