[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

போதையில் இருந்த பயணி மீது நடத்துநர் கடும் தாக்குதல்: வைரல் வீடியோ

bus-conductor-attacks-passenger-viral-video

ராமநாதபுரம் அருகே பயணச்சீட்டு வாங்காமல் பேருந்தில் பயணம் செய்ததாகக் கூறி தனியார் பேருந்து நடத்துநர் பயணியை கடுமையாக தாக்கியுள்ளார்.

ஓரியூரிலிருந்து திருவாடானை வழியாக செல்லும் தனியார் பேருந்தில் பாலக்குடியைச் சேர்ந்த பயணி ஒருவர் ஏறி பயணம் செய்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பேருந்து நடத்துநர் டிக்கெட் எடுக்கச் சொன்னபோது, டிக்கெட் எடுக்க அந்தப் பயணி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த தனியார் பேருந்தின் நடத்துநர், திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கிய அந்தப் பயணியை இதற்காகவே காத்திருந்தவர் போல, கீழே இறங்கி கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் ஏற்கனவே மதுபோதையில் இருந்த அந்தப் பயணி மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிய முடியாமல் கிடந்தப் பயணி அரை மணி நேரம் கழித்து தானாகவே எழுந்து சென்றுள்ளார். இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close