[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

செவிலியர் தூக்கிட்டு தற்கொலை : பெற்றோர் போராட்டம்

the-nurse-committed-suicide-in-vellore

வேலூரில் தனியார் மருத்துவமனை செவிலியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (23). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்தார். இவருக்கு செவிலியர் துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவு பணி வழங்கி வருவதால் மன உளைச்சல் ஏற்பட்டுவதாக பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெனிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜெனிபரின் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவமனை முன்பு (சிஎம்சி) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். மேலும் தற்கொலை குறித்து லத்தேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close