பிளாக் பெர்ரி கீ2 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
பிளாக் பெர்ரி மொபைல் நிறுவனம் கீ2 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,990 ஆகும். இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. அத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.4,450 கேஷ் பேக் ஆஃபரும் இதனுடன் இணைத்து வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ மூலம் இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 12 எம்பி இரட்டை கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
கீ போர்டு வசதியுடன் கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 4.5 இன்ச் ஆகும். சமீபகாலமாக செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நூதன முறையில் தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. அத்துடன் பலரிடம் செல்போன்கள் மூலம் தகவல் திருடப்பட்டு, அதன்படி வங்கியிலிருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் பாதுகாப்புகளுடன் தகவல்களை திருட முடியாத வகையில் இந்த “கீ2” மாடலை பிளாக் பெர்ரி தயாரித்துள்ளது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்