[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..!

sub-inspector-attacked-the-student-the-student-s-hand-was-broken

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட வாலிபரின் வீட்டுக்கே சென்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார்.  இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close