[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்

cm-speech-at-chennai-mathavaram

மகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை மாதவரத்தில் ஜெயின் சமூக விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

ஜெயின் சமயத்தின் 9-ஆவது மத குருவான ஆச்சார்யா மஹாஸ்ரமண் சென்னையில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி ஜெயின் சமயத்தவருக்கு உபதேசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாதுர்மாஸ் என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார். இந்தியா திருக்கோயில் என்றால் கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு எனவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் இறை பக்தி அதிகமாக இருப்பதால் வெளிநாட்டவர் இங்கு வருகிறார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close