[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

கோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..!

statue-for-abdul-kalam-in-rameshwaram-temple

கோயில் ஒன்றின் கோபுரத்தில் அப்துல் கலாமின் சிலை இடம்பெற்றிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட் வீரர் முகமது கைப்பும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் ஏபிஜே அப்துல் கலாம். கடந்த 2002ம் ஆண்டு 2007-ஆம் ஆண்டு வரை அவர் இந்தப் பதவியை வகித்தார். நாட்டில் எத்தனையோ குடியரசுத் தலைவர் வந்தாலும் அப்துல் கலாலுக்கு தனிப்பெருமை உண்டு. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் நாட்டின் மிகப் பெரிய பதவியை வகித்தவர். குழந்தைகள் மீது தனிப் பிரியம் கொண்டவர். குழந்தைகளும் அவர் மீது அதிக அன்பு வைத்திருந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் இறந்த போது நாடே கவலையில் ஆழ்ந்தது. இப்போதும் அப்துல் கலாமின் அறிவுறுத்தல்களை பின்பற்றும் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.

இந்நிலையில்  கோயில் ஒன்றின் கோபுர மண்டபத்தில் அப்துல் கலாம் சிலை செதுக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இதனை பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக உள்ளது. உண்மையான ஹூரோ. அனைவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர்” என்ற கேப்சனை பதிவிட்டுள்ளார். இதில் முகமது கைப்பிற்கு பின்னூட்டம் தெரிவித்த பலரும் அந்தப் புகைப்படத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

நாட்டின் தலைசிறந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என ஒருவரும், மற்றொருவரோ அப்துல் கலாமால் நான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பொதுவாக கோயில்களில் தெய்வங்களுக்கு தான் சிலைகள் செதுக்கப்படும். ஆனால் அப்துல் கலாமை தெய்வமாக நினைத்து தற்போது கோயிலில் சிலை செதுக்கியுள்ளனர். இதன்மூலம் அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவுக்கடந்த அன்பு வெளிப்படுகிறது.

இந்த கோயில் செங்கல்பட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close