[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது

a-punk-shop-owner-arrested-for-sexual-harassment-case-in-virudhunagar

விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் கல்லூரி சாலையில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அருகே பல முருகராஜா (45) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். பள்ளிக்கு அருகில் உள்ள கடை என்பதால், பென்சில், பேனா, சிறிய ரக நோட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மாணவிகள் இங்கே வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடையில் உரிமையாளர் பால முருகராஜா மனதில் கொடூர எண்ணம் கொண்டிருந்துள்ளார்.

(இதையும் படிங்க : குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ! சென்னை முதலிடம்)

இவர் கடைக்கு வரும் மாணவிகளுடன் அவ்வப்போது, தகாத முறையிலும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார். விவரம் அறியாத மாணவிகள், தந்தை வயதுடையவர் என்ற எண்ணத்தில் கடைக்கு வரும் போதெல்லாம் சாதாரணமாக பேசிச்சென்றுள்ளனர். ஆனால் வக்ர புத்தி கொண்ட முருகராஜாவோ, தனது தீய எண்ணங்களை நாளுக்குநாள் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மாணவிகள் இவர் கடைக்கு வருவதை குறைத்துள்ளனர். இருப்பினும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கடை என்பதால், சில நேரங்களில் வேறு வழியின்றி கடைக்கு வந்து சென்றுள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முருகராஜா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அதை மாணவிகளிடம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்தைக் கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டதும், கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியில் சென்று முறையிட்டுள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில் பெட்டிக்கடைக்காரரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close