[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

சரணடைய வந்தவரை கைது செய்வதா? தலைமை காவலருக்கு அபராதம்

penalty-for-the-chief-of-police

கொலை வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் நுழைந்து கைது செய்த கோவை சிங்காநல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த சந்தோஷ், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாக கூறப்படுகிறது. அப்போது சிங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன், தலைமை காவலர் ராபர்ட், ஓட்டுநர் வேலன் ஆகியோர் நீதிமன்ற அறைக்குள் சென்று, சந்தோஷை கைது செய்தனர். 

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிபதி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பி வைத்தார். இதையடுத்து மூவர் மீதும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினர் மூவரும் நேரில் ஆஜராகி தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், அபராதம் செலுத்தியதற்கான அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close