[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுவை ஏன் அதிக விலைக்கு விற்கிறாய்..? என கேட்டவருக்கு அடி உதை 

alcohol-is-sold-indirectly-in-kodaikanal

கொடைக்கானல் அருகே பெருமாள் மலையில் கள்ள சந்தையில் விற்கப்படும் அரசு மதுபானம், இரண்டு மடங்கு கூடுதலாக விற்கப்பட்டதால் அதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை கொடுக்கப்பட்டது பரபரப்பை உண்டாகியுள்ளது. 

கொடைக்கானலில் அருகே உள்ள பெருமாள்மலை கிராமத்தின் பழனி பிரிவு அருகே, சில மாதங்களுக்கு முன்னர், நெடுஞ்சாலையில் இயங்கிவந்த அரசு மதுக்கடையை மூடக்கோரி, பெண்கள் அமைப்பு இணைந்து போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் விளைவாக மதுக்கடை மூடப்பட்டது. அதனை அடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பழனி பிரிவு அருகே, பழனி நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக, கள்ள சந்தையில் மது விற்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. 

நேற்று பழனி பிரிவு போலீஸ் வாகனச் சோதனைச் சாவடி அருகே, கள்ள சந்தையில் இரண்டு மடங்கு கூடுதல் விலையில் அரசு மதுபானங்கள் விற்கப்பட்டு வந்துள்ளன. அங்கு மது வாங்க சென்ற பெருமாள் மலையைச் சேர்ந்த நாகைய்யா என்பவர், கள்ள சந்தையில் மது விற்றவரிடம் இரண்டு மடங்கு விலையைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு சராமாரியாக அடி உதை விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெருமாள்மலை பொதுமக்கள் கூடி காவலர்களிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்து கள்ள மது விற்பனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close