[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

விடுமுறையை கொண்டாட கடலில் குளித்த மாணவர் : அலையில் சிக்கிய பரிதாபம்

poly-technique-student-die-in-ennore-ocean

எண்ணூர் கடலில் நண்பர்களுடன் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் ருக்கு. திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மகன் அப்பு. திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். விடுமுறை தினம் என்பதால் இன்று தமது நண்பர்களுடன் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கடல் அலை அப்புவை இழுத்து சென்றது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்புவை தேடிவந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட எண்ணூர் காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு  விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close