[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

திடீரென மாயமான தமிழகத்தைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் !

tamil-nadu-reserve-police-missing-in-delhi

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் உதவி சப்இன்ஸ்பெக்டர் டெல்லியில் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகில் உள்ள மணத்தியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அண்ணாதுரை(36). இவர் மத்திய ரிசர்வ் போலீஸ்படை, மகராஷ்ரா பட்டாலின் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கருங்குளம் சி.எம்.எஸ். கோயில் தெருவை சேர்ந்த சுடலைமகள் தேவகனி (30) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கனிக்ஷா(7), நவீன்(4) என்ற குழந்தைகள் உள்ளன.

குழந்தைகள் படிப்புக்காக இவர் குடும்பம் பாளையங்கோட்டை தெற்கு பஜார்பட்டு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் அண்ணாதுரைக்கு பணியிடமாற்ற ஆணை வந்தது. இவர் சண்டிகார் ஐந்தாவது சிக்னல் பட்டாலியனுக்கு மாறுதல் செய்யப்பட்டார். எனவே அவர் பாளையங்கோட்டைக்கு வந்து மனைவி குழந்தைகளுடன்10 நாள் தங்கி இருந்தார். 

அதன் பின் கடந்த 29 ந் தேதி இரவு 9.10 மணிக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பினார். 30ந்தேதிவரை மனைவியுடன் போனில் பேசி கொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது போன் துண்டிக்கப்பட்டது. ஆனால் குறுந்தகவல் சேவை மட்டும் வந்துக்கொண்டிருந்தது. தகவல் தெரியாமல் தேவகனி தவித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 ஆம் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் அவரது பெட்டி மற்றும் பொருள்கள் கிடந்துள்ளது.

இதை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் தேவகனியுடன் தொடர்புகொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகனி, பாளையங்கோட்டை போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் மனுகொடுத்துள்ளார். மத்திய ரிசர்வ் போலிஸ் படை உதவி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மாயமானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close