[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மதுரை சர்ச்சை சுவர் யாருக்கு சொந்தம் ? - அதிருப்தி அடைந்த நீதிபதிகள்

supreme-court-upset-fo-madurai-wall-issue

மதுரையில் சர்ச்சைக்குரிய சுவர் இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சந்தையூர் பகுதியில் இருக்கும் ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றி ஒரு சமூகத்தினர் சுவர் எழுப்பினர். இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, அந்தச் சுவரின் குறிப்பிட்ட ஒரு பகுதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சுவர் எழுப்பிய சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையில் அந்தச் சர்ச்சைக்குரிய சுவரை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுவரை எழுப்பிய சமூகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற விசாரணையின் போது, சுவர் இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் அவர் தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், சர்ச்சைக்குரிய சுவர் இருக்கும் இடம் குறித்து, தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இறுதி வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close