[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவையில் பரவும் மர்ம காய்ச்சல் ?

people-are-suffering-from-mysterious-fever

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். 

கோவை புறநகர பகுதிகளில் கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு அதிகப்படியான தென்மேற்கு பருவமழை அளவு பதிவாகியிருந்தது. இந்தச்  சூழலில், கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே பொதுமக்கள் மத்தியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. முதல் கட்டமாக, 102டிகிரி முதல் 105டிகிரி வரை காய்ச்சல் தீவிரமடைந்து, பின்னர் கை, கால், மூட்டுகளிலும், எலும்பு இணைப்புகளிலும் அதிகப்படியான வலியை பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. முதலில், வைரஸ் காய்ச்சல் போல அறிகுறிகளை காட்டும் இந்தக் காய்ச்சல் பின்னர், எலும்புகளில் அதிக வலிகளை ஏற்படுத்துகிறது.

முதல் கட்டமாக குடும்பத்தில் ஒருவரை தாக்கும் இந்தக் காய்ச்சல் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் பிறரையும் நோய் பாதிப்புக்கு உட்படுத்துகிறது. இதனால் ஒரு குடும்பமே முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. குறிப்பாக, கோவையில் பால் கம்பெனி, லாலி ரோடு, மதுக்கரை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் அதிகப்படியான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல் கட்ட நடவடிக்கையை துவங்கியுள்ள மாநகராட்சி, மக்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மருத்துவ முகாமை அமைப்பதோடு, நோய் பரவாமல் இருப்பதற்கு தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மாநகர சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, முதல் கட்டமாக காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள், தாங்களாகவே சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் மருத்துவரை அணுகி, உடல் பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு ஆரம்பக்கட்டத்திலேயே இந்தக் காய்ச்சலை கட்டுப்படுத்திக்கொள்ள வலியுறுத்தினர். மேலும் இது எந்த வகையான காய்ச்சல் என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close